Thursday, September 10, 2009

உலக அமைதி
உலக அமைதி
ஆன்மிகம்

உலக அமைதி
ஆன்மிகம்
உலகில் மக்கள் ஒவ்வொருவரும் விரும்புவது அன்பு, அமைதி, அஹிம்சை, இன்பம், சமத்துவம், சாந்தம் முதலிய நல்ல பண்புகளைக் கொண்ட ஒற்றுமையான மனிதநேய வாழ்க்கையைத் தான்.
இவை மக்களிடையே வேரூன்றி வளர பண்டைய காலங்களில் வாழ்ந்த தவசீலர்களான முனிவர்களும், ஞானிகளும், ரிஷிகளும் சத்தியம், நேர்மை, தருமம், பிறரை நேசித்தல் முதலிய நல்ல ஒழுக்க முறைகளை வகுத்து, வழங்கி வழக்கப் படுத்தினார்கள்.
பிறவியெடுத்த ஜென்மங்களுக்கு வியாதிகள் ஏற்படுதல் போல, நீதி, நேர்மையைக் கடைப்பிடித்து வாழும் மாந்தர்கள் பலரில் சிலர் துன்பங்கள், கொடுமைகள், இன்னும் பல தீமைகளை செய்வதையே தொழிலாக கொண்டு வாழ்கிறhர்கள்.
இதனால் உலகில் பெரும்பான்மை மக்களிடையே ஒற்றுமை குலைந்து வாழ்க்கை சிதறி நன்மைகள் நாசமடைய வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது.
இம்மாதிரி கேடுகள் ஏற்படக் கூடாது, வளரக் கூடாது. தீச்செயலுக்கு மக்கள் ஆட்படக் கூடாதென முன்னோர்கள் நல்ல பண்பு வளர, பல அறிவுரைகள், கதைகள், நீதியைப் புகட்டும் கூத்துகள், நாடகங்கள், இலக்கியங்களை இயற்றித் தந்துள்ளார்கள்.


தீயவை தீய பயத்தால் தீயவை
தீயினும் அஞ்சப்படும். 202
எனத் திருவள்ளுவர் எச்சரித்துள்ளார்.இந்த இலக்கியங்கள் மூலம் மனித உள்ளங்களில் கருணை, மகிழ்ச்சி வளர இறைவனின் நாமங்களை உச்சரித்தல், தியானம் செய்து பக்தி கொள்ளல், புனித ஸ்தல யாத்திரை முதலிய நல்ல மார்க்கங்களை அனுபவித்து, அனுபவத்தின் மூலம் அமைத்துத் தந்துள்ளனர்.
இப்பேர்ப்பட்ட இதில் அடங்கியுள்ள சத்திய வழி, உண்மைத் தத்துவத்தை ஆழமாக உணராத அவசரத்தில், மேலோட்டமாக உணர்ந்து, மூடப் பழக்க வழக்கங்களில் சிலர், மக்களை ஈர்த்து, மயக்கி விடுதலால் அநேக மக்கள் வாழ்க்கையில் தடுமாறி அல்லலுக்கு ஆளாகி விடுவிறhர்கள்.
ஆகவே, நேர்மை, சத்தியம், நல்ல பண்பு ஒரு அடி வளர்ந்தால், தீய சக்திகள் பல ரூபங்களில் பூவுலகையே மூடிக் கொள்ளும் அளவிற்கு வானளாவ வளர்ந்து விடுகின்றன. ஆகவேதான் நோய் வந்தபின் மருத்துவம் செய்து நலமடைவது ஒன்று, நோய் வருமுன் மருத்துவ முறையில் தடுத்து நலமுடன் வாழ்வது இன்னொன்று.
ஆகவேதான் உலகில் மக்களின் வாழ்க்கையில் ஒற்றுமையைக் கெடுக்கும் தீய சக்திகள் எவையெவையெனக் கண்டு பட்டியலிட்டு, அவற்றை நீக்க வழிமுறைகளை உலக மக்களுக்கு தெரியப்படுத்துதல் உலகோர்க்கு நன்மை பயக்கும்.
ஒற்றுமையைக் கெடுக்கும் தீமைகளாவன ்-
திருட்டு, புரட்டு, கொலை, கொள்ளை, களவு, லஞ்சம், வஞ்சம், வன்முறை, துரோகம், கற்பழித்தல், துன்புறுத்தல், மோசடி, ஊழல் ஆகியவை பல கோடி ரூபங்களில் அவதாரம் எடுப்பதை நாளேடுகள் தரும் செய்திகளில் கண்டறியலாம். திறமையான செயலென ஊழல் பூதாகரமாக வளர்ந்துள்ளது. வெடிகுண்டு, மனித குண்டு, அணுகுண்டு, பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் முதலிய நச்சுகளினால் மனிதர்க்கு மனிதரே தாக்கி மனிதர்கள் அழிவதையும் காண்கிறேhம். பண்டைய சரித்திர காலத்தில் மன்னருக்கு மன்னர் போர் புரிவது, வெற்றி – தோல்வியடைவது, போர் வீரர்கள் சாவது ஆகிய போர்க்களங்கள் மறைந்து, இன்று உலகப் போராக வளர்ந்து, போர் வீரர்களும் பாமர மக்களும் மடிகிறhர்கள்.
இப்படி அழிவுகள் வளர்ந்தாலும் உலகில் மக்கள் வாழ்க்கைப் போராட்டத்தின் வேகத்தால் இவற்றைக் கண்டும் காணாததும் போல வாழ்கிறhர்கள், வாழ்கிறேhம்.
இருந்தாலும் மக்களிடையே நல்லபண்பு, ஒற்றுமை வளர பல மார்க்கங்கள் உள்ளன. அவற்றில் பக்தி மார்க்கம் ஒன்றுதான் இயல்பானது எளிதானது, பெரும்பான்மையான மக்களை ஈர்க்கவல்லது.
ஆகவே பண்டைய காலத்தில் நரகாசுரனைக் கொன்றதற்காக நாம் இன்றும் ஆண்டுதோறும் தீபாவளி விழாவை கொண்டாடுகிறேhம். கம்சன் என்னும் அரக்கனை கிருஷ்ணன் மாய்த்தும், (தசாவதாரம் நினைவு கொள்ளலாம்) முருகன் கோயில்கள் அனைத்திலும் இன்றும் ஆண்டுதோறும் Nரசம்ஹhர விழா நடப்பதும் நாம் அறிந்ததே. இதை நம்பாதவர்கள் இவற்றில் புலப்படும் செய்கைகளை ஒற்றுமைக்கு நீதிக்கு மார்க்கமெனக் கொள்ளுதல் மிக மிக நன்று.
இதனால் கடந்த பல யுகங்களில் சில மன்னர்கள் ஆட்சியில் மக்களைக் கொடுமைப்படுத்தி கொடுந்துன்பங்களை ஏவியதால் அம்மன்னர்களை, அரக்கர்கள், ராட்சஸர்கள் என வன்மையைக்காட்டும் பட்டங்கள் Nட்டப்பட்டன. அவ்வரக்கர்களை மாய்க்க (நபிகள் நாயகம், புத்தர் மகான், காந்தி அடிகள், இயேசுநாதர் போல) ஆண்டவன் மனிதனாகப் பிறந்தார். (இவை கதைகளாகத் தெரிந்தால் உதாரணமாக ஏற்றுக்கொள்ளலாம்). அம்முறை மாறி கலியுகத்தில் கதி மோட்சம் தர அகிம்சை மூலம் அரக்கர்களை அழிக்க பலர் தோன்றினர். அதில் பல நு}ற்றhண்டுகளுக்கு முன்பு கபிலவஸ்து நாட்டின் அரசர் சித்தார்த்தர் தனது வீட்டையும் நாட்டையும் துறந்து நாட்டு மக்களுக்கு, உலகுக்கு அஹிம்சையைப் போதித்தார். எனவே, புத்தர் மகான் என்ற சிறப்பைப் பெற்றhர்.
ஆனால், சென்ற நு}ற்றhண்டில் வாழ்ந்த காந்தி மகான், தனது இல்லற வாழ்க்கையின் ஊடே அஹிம்சை என்ற தாரக மந்திரத்தையே, தன் படை பலமாக ஆக்கி இந்திய நாட்டிற்கு 1947-ம் ஆண்டில் அடிமைத்தனத்தை நீக்கி விடுதலை பெற்றுக் தந்தார்.

சுருக்காமாகச் சென்னால் மகான் புத்தர் அஹிம்சையைப் பரவச் செய்ய நாட்டைத் துற்ந்தார்.
ஆனால், காந்தி மகான் அஹிம்சையைக் கடைப்பிடித்து நாட்டிக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தார்.
ஆகவே, அகில உலகுக்கும் அண்டவன் ஒருவனே என்பதை உளமார ஒப்புக்கொண்டு இறைவனை, ஆண்டவனை பிரார்த்திப்போம்.
இறைவன் ஒருவனே என்றhலும் உலகில் உள்;ள பல நாடுகளில் பலப்பல நாமங்கள் (பெயர்கள்) Nட்டி வழிபடுகிறhர்கள். எப்படியென்றhல், உலகில் நீரைக் குடித்து உபயோகிக்கிறேhம்.
அதவும் தண்ணீரைப் பொறுத்தவரையில் உலக மக்கள் அனைவரும் ஒரே மாதிரியாகப் பாவிக்கிறேhம், வேற்றுமையில்லை. ஆகவே, உலகில் இறைவனுக்குப் பல பெயர்கள் அமைந்திருந்தாலும் எல்லாப் பெயர்களும், இறைவன் ஒருவனையே சார்ந்ததுதான். ஆகவே பானி என்றhலும், வாட்டர் என்றhலும் பருகிக்கொள்வது போல உலகில் மக்கள் ஒற்றுமையை வளர்க்க, பல நாட்டில், பல மக்கள் இறைவனை பல நாமங்களால் வழிபட்டாலும் இறைவன் ஒருவனே என நாம் வழிபடுவது முதல் ஒற்றுமை.

ஆகையினால் உலகுக்கு ஓரே பயங்கர எதிரியான அணுகுண்டரக்கனை மாய்ப்பதற்கும் அரக்கனுடைய ஆயிரமாயிரம் அளவற்ற படைகளைத் திருத்துவதற்கும் அணுவீஸ்வரக் கடவுள், ஆண்டவன் அல்லா, இறைவனின் தூதர் இயேசு (முருகா, ராமா, கிருஷ்ணா, வெங்கடடேசா), புத்தர்பிரான், வள்ளலார், நாயன்மார்கள், ஆழ்வாராதிகள், மகாத்மா காந்தி மற்றும் பராசக்திகள் அனைத்தையும் அனைவரையும் வணங்கி பிரார்த்தனை செய்வோம்.
திறமையாக வன்முறையைக் கையாள்பவர்களை அரசாங்கம் கண்டுபிடித்து குற்றவாளிகள் எனத் தீர்மானித்து, தகுந்த தண்டனை விதிக்கப்படுவது நடைமுறை. இதனைத் தெய்வத்திருவள்ளுவர் செங்கோன்மையைப் பற்றி சொல்லும் பொழுது 2200 ஆண்டுகளுக்கு முன்),
"கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களை கட்டதனொடு நேர்"
என்கிறhர்.
அதாவது மன்னர்கள் கோலோச்சிய காலத்தில் மக்களைத் துன்புறுத்தும் குற்றவாளிகளை மன்னன் தண்டிப்பது என்பது வேளாண் பயிருனு}டே முளைக்கும் களைச் செடிகளை வெட்டுதல் போலாகும்.
ஆனால், தற்போது நம் பாரத நாட்டில் மன்னர் ஆட்சி அகன்று மக்களாட்சி (ஜனநாயகம்) செயல்படுகிறது. குற்றவாளிகளைத் தண்டிப்பது யார்? நீதிபதிகளா ? அதுதான் இல்லை.
எப்படியெனில் நமது பாரத தேசத்தில் நு}று கோடிக்குமேல் மக்கள் வாழ்கிறேhம். மக்களாட்சியில் குற்றவாளிகளைத் தண்டிக்க அரசியல் சட்டம் இயற்றியுள்ளோம்.
நு}றுகோடி மக்கள் ஒன்றுபட்டு சட்டம் இயற்ற மத்திய சர்க்கார் என்றும் மாநில சர்க்கார் என்றும் பிரித்து மக்களவை, சட்ட சபைகள் ஏற்படுத்தி நு}ற்றுக்கணக்கானவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் (ஆ.P.), சட்டமன்ற உறுப்பினர்களாகவும் (ஆ.டு.A.) தேர்ந்தெடுத்து மக்களவைக்கும் சட்டசபைகளுக்கும் மக்களாகிய நாம் பிரதிநிதிகளாக அனுப்பியுள்ளோம். அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கும், தடைகளை நீக்குவதற்கும் குற்றவாளிகளைத் தண்டிக்கவும் தக்க சட்டங்களை (விதிகள்) நம் சார்பில் இயற்றுகிறhர்கள். அதாவது நாமே சட்டம் இயற்றியுள்ளோம் என்பதாகும். ஆகவே, முன்னேற்றகரமாக நல்ல சட்டங்களால் நாம் நன்மை பெறுகிறேhம். நாம் குற்றம் செய்தால் நாமே இயற்றிய சட்டத்தால் நம்மை நாமே தண்டித்துக் கொள்கிறேhம். அது தூக்கு தண்டனை, மரண தண்டனையே ஆனாலும் நாம் நமக்காக இயற்றிய சட்டம் தான் என்பதை உணர்ந்து, உலகில் நாம் நல்ல பண்பினைக் கடைப்பிடித்து ஒற்றுமையாக வாழ்வோம்.
தவிர முன்னே குறிப்பிட்டுள்ள பல தீமைகளில் கற்பழிப்பு ஒன்று, இதை விரிவாகக் காண வேண்டியது மிக அவசியம். ஏனெனில் எல்லாத் தீமைகள் ஏற்படவும் வளரவும் காமாந்தகார வழியே காரணம்.
அதாவது அரக்கனின் அளவற்ற துர்ப்படைகள் செய்யும் அநியாயம், அக்கிரமங்கள் கோடிக்கணக்கான தீமைகள் யாவும் ஒரு பங்கு, ஆனால், ஒரு சிறிய காமக்களியாட்டப் படை வளர்க்கும் தீமைகள் ஒரு கோடிப் பங்கு. ஆகவே, காமக்களியாட்டப்படை என்பது எது ? அதுதான் ஆபாச சினிமாப்பட்டாளம் (சிறியது).
நல்ல நீதி, நெறி பண்புகளை வளர்க்கும் நல்ல சினிமாக்களை வரவேற்போம். ஆனால், ஆபாச சினிமாக்காரர்களைக் கண்டிப்போம். இதனை இன்னும் விரிவாகச் சொல்ல வேண்டும். எப்படியென்றhல் சினிமாக்காரர்களே நீங்கள் நல்ல நீதிநெறிக் கதைகளை சினிமாகப்படங்களாக எடுத்து நல்ல பண்புகளை வளர்த்து, நல்ல சோறு சாப்பிட்டு மக்கள் நல்வாழ்வு வாழ உதவுங்கள் என்று உங்கள் காலில் விழுந்து கும்பிடுகிறேhம். ஏனென்றhல் மனிதர்கள் செய்யும் அனைத்துத் தொழில்களைவிட கலைத் தொழில்கள் சிறந்தவை. பல கலைத் தொழில்களில் சினிமாக் கலைத் தொழில் மிகச் சிறந்தது.
எப்படியெனில் மற்ற தொழில்கள் அறிவை, பண்பை உயர்த்துவதிலும் கெடுப்பதிலும் வேகம் குறைவு. ஆனால், சினிமாக் கலையில் இளைஞர் முதல் முதியோர் வரை பண்பை உயர்த்தும் வேகத்தைவிட பண்பைக் கெடுக்கும் வேகம் மிக மிக அதிகம்.
ஆகவே, ஆபாச சினிமாக்காரர்களே, நீங்கள் ஆபாச சினிமா படமெடுத்து நாள்தோறும் நான்கு காட்சிகளைக் காட்டி, ஆபாசத்தையே வளர்த்து நல்ல பண்புகளைக் கெடுத்து (இளைஞர் - முதியவர்) மக்களைக் கெடுத்து, கொள்ளையடித்துக் கொழுப்பதற்காக நீங்கள் வெட்கம், மானம் இல்லாமல் ஆபாசத்தைத் திணிப்பதைக் கண்டிக்கிறேhம்.
சிறு சிறு குற்றம் செய்பவர்களையும தண்டிக்க சட்டம் இருக்கிறது. தண்டிக்கப்படுகிறது. ஆனால் பகிரங்கமாக ஆபாசத்தை வளர்ப்பதை (சினிமாவில்) கண்டிக்க சட்டம் இருந்தும் தடை செய்யப்படுவதில்லை.
கதாபாத்திரத்துக்குத் தகுந்த ஆடை அணிய வேண்டுமென சப்பைக்கட்டு கட்டுவார்கள். அதுவும் கதாநாயகிகளுக்கே குறை ஆடை தான் என்று சொல்வது எப்படி நியாயம் ஆகும் ? ஆண், பெண் இரு பாலருக்கும் முழு ஆடை தேவை, தாத்தா, பாட்டி, பேரன், பேத்திகளுக்குச் சொல்லும் கதைகளில் ராஜh, ராணி, கல்யாணம், குழந்தை பிறப்பு எல்லாம் சொல்வதுண்டு. அதுபோல முன்பெல்லாம் நாடகங்களில் நடிப்பதுபோல சினிமாவிலும் காதல் காட்சிகள் இலை மறைவு காய் மறைவாகயிருந்தது. ஆனால், சுமார் 20 ஆண்டுகளாக கவர்ச்சிகளை பகிரங்கமாகக் காட்டி, கட்டிப் பிடித்து உருண்டு நடிப்பதே சகஜத்துக்கு வந்துவிட்டது. ஆகையினால் தற்கால இளைஞர்கள் இதுதான் நாகரீகம் எனக் கொள்ளுகிறhர்கள், கொள்வார்கள்.
ஆகவே, தற்காலப் பெரியவர்களும் மாதர்களும், மானம் உள்ளவர்களும் ஆபாச சினிமாக்காரர்களைக் கண்டித்துத் திருத்த வேண்டிய கட்டாயம் நேர்த்திருக்கிறது.
‘மானம் சிறிதென் றெண்ணி
வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகினிலே – கிளியே
இருக்க யிடமு முண்டோ"
என பாரதியார் அப்படிப்பட்டவர்களுக்கு இடமில்லையென்கிறhர்.

1 comment:

 1. மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
  நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
  இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
  ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

  இங்கே சொடுக்கவும்

  ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
  அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

  அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
  தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  ReplyDelete