Friday, October 9, 2009

2-ம் பாகம் அணிந்துரை

2-ம் பாகம்

அணிந்துரை


திருப்பூர் மகான் காந்திஜp என்னும் அணுகுண்டு தாத்தா என்று புகழப்படும் திருவாளர் எம்.கே. சவுண்டப்பா அவர்களின் பாராட்டுக்குரிய படைப்பே, உலக அமைதி என்னும் இந்நு}ல்.

‘மதிநுட்பம் நு}லோடுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற்பவை’ - திருக்குறள் 636

என்ற வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க இந்நு}ல் ஆசிரியர் ‘தான் கேடறக் கற்ற நு}லறிவுடன், தனது 60 ஆண்டு கால பொது வாழ்வில் பெற்ற அனுபவம், மதிநுட்பம், வினைத் திட்பமும் கொண்ட பெரியார்’ இவர் என்பது மிகை அல்ல.

முருகா ராம் பஜன் மன்றம் என்ற அமைப்பின் மூலம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்ற திருவருட்பிரகாச வள்ளலாரின் வாழை யடிவாழையென்ற கருத்தின்படி அவதரித்த மகான் இவர் என்பதை நு}ல்நயம் காண்போர் அறுதியிட்டு கூறுவர் என்பதில் ஐயமில்லை.

உலக மக்களின்பால், விழிப்புணர்வு ஏற்படுத்தி ‘வாழு, வாழவிடு’ என்ற கோட்பாட்டுடன் சமுதாய சீரழிவுகளைக் களைய தொண்டு ஆற்றhதவர், பாவச் சோற்றினை உண்பவர்களுக்கு ஒப்பாவர் என்பதை நு}hலினுள் வலியுறுத்தி எடுத்துக்காட்டுகளுடன் இடித்துரைப்பதற்குச் சான்றhக, அவருடன் பல காலம் தொடர்புள்ள அடியேன் அவர் கூடவே பல பள்ளிக் கூடங்களுக்கும், கல்லு}ரிகளுக்கும் சென்று நேரில் பயின்ற அனுபவத்தால் அறுதியிட்டு கூற இயலும். தனது 83-ம் அகவையில் மனதநேயத்தோடு, பொய்யுலக மேகத்தழைகளை உடைத்தெறிய அறைகூவல் விட்டுள்ளார் கருவிலே திருவுற்ற நமது அணுகுண்டு தாத்தா.

அன்னாரது தூய சிந்தனையில், இச்சமுதாயச் சீர்கேடுகளை இனியும் வளரவிட்டால் புரையோடிப்போன ஈரல் போல் உலக சமுதாயம் மிருகங்களுக்கொப்ப, உறவும் பண்பும் கெட்டு வாழ நேரிடும். எனவே, மனம், வாக்கு, செயலால் தீமைகளை நீக்கிட அனைத்து ஊடகங்களும் உறுதுணையாக மலர வேண்டும் என்ற கருத்துகளை வலியுறுத்திக்கூறும் பாங்கு யூகித்து உணரற்பாலது. இதனை ஏற்பது நம் கடமை. ஏற்காதது மடமை. பத்திரிகை, நாளேடு, தொலைக்காட்சி, திரைப்படம், தொலைத்தொடர்பு ஊடக வலை (இன்டர்நெட்) மூலம் கிராமம் போன்றhகிவிட்ட இவ்வுலகில் இளைஞர் சமுதாயம் அவசரக் கோலத்தையும், பொறுமை இன்மையையும் கைவிட்டு, பொறுப்புணர்வு பெற்று, சமச்சீரான வாழ்வுக்குத் திரும்ப வேண்டுமென்பதே நு}ல் ஆக்கிய அணுகுண்டு தாத்தாவின் வேட்கை எனலாம்.

எனக்குக் கால் ஊன்ற இடமும் ஒரு நெம்புகோலும் கிடைத்தால் இவ்வுலகையே புரட்டிடுவேன் என்று அறைகூவல்விட்ட ஆர்க்கிமெடிஸ்சு போல நமது தத்துவஞானிக்கு, சிறுவதம்பை முருகா ராம் பஜன் மன்றமாகிய இடமும் நெம்புகோலான இந்நு}லும் பாரிலுள்ளோர் எல்லோரும் உயர்ந்து, உய்வுபெறவும் நல்லதோர் உலகம் செய்யவும் பெரிதும் உதவும் என்பது திண்ணம்.

அன்றhடம் தம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் இளைய தலைமுறையினருக்கு ஒரு தீய திசை வழியை திரைப்படங்களும், வன்முறையைத் தூண்டும் இதர ஊடகங்களும், பத்திரிகைகளும் காட்டி வருகின்றன என்ற அருட்செல்வர் திரு. நா.மகாலிங்கம் அய்யா அவர்கள் தமது ‘ஓம்சக்தி’ 2003 ஆகஸ்ட் திங்கள் இதழில் எழுதியுள்ள ஆவணச்சான்று இந்நு}லுக்கு முத்தாய்ப்பு வைத்துள்ள எடுத்துக்காட்டாகும். முனைவர் பட்டம் பெறவுள்ளோர் இதனை ஆய்வுக்களமாக மேற்கொள்ளக் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளும் ஏற்புடையதே.

அணுகுண்டு ஆயுதம் ஜப்பான் நாட்டு ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய ஊர்களில் ஏற்படுத்திய அழிவுகளின் தாக்கம் இன்று வரை அந்நாட்டு மக்களின் உடல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவது கண்கூடு.

இச்செய்தியினை அடிப்படையாகக் கொண்டு தன் வாழ்நாளில் மேற்கொண்ட ஒற்றைக்காலில் நின்று செய்த தவவலிமை, மனவலிமை காரணமாக தன் வாழ்க்கையையே நிலைக்களமாக்கிக் கொண்டு ஆபாசம் படுத்தும்பாடுகள், அணுகுண்டைவிட பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதமாகும் என்பது படித்தோர் மனதில் பசுமரத்தாணி போல் பதியும் என்பது திண்ணம்.
தான் தொடுத்துள்ள முயற்சிக்கு ஆதாரமான செய்திகளை எழுத்து வடிவில் உள்ளவற்றை அட்டவணையிட்டுத் தொகுத்துக் கொடுக்க அரும்பாடுள்ளார். இச்சகத் தீமைக்கும் எண்ணில துணைவர்காள். எமக்கிவர் செய்யுந்துயர் பொல்லாதது. அவர்களும் வருந்தி திருந்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டும் நம் சமுதாய சிந்தனைச் சிற்பி,

‘தெய்வம் மறவார் செயுங்கடன் பிழையார்
ஏதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்
என்பது என் உளத்தே வேர் அகழ்ந்திருந்தலால்’

என்று கூறி சாத்தான்களுக்கு சாவுமணி அடித்துள்ளார். தகவல் ஊடகங்களான, திரைப்படம், தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்படும் விரசமான ஆடைக் குறைப்புக் காட்சி, ஆபாசங்களின் வளர்ச்சி இன்றும் பள்ளி, கல்லு}ரி மாணவர்களிடையே பிரபலமாகி, மாடலிங், பேஷன்ஷேh போன்ற ஆபாசக் காட்சிகளுக்குப் பெற்றேhர்களே சாட்சியாக இருப்பது பற்றி தன் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நு}லில் முத்தாய்ப்பான பகுதியாக உள்ள ஓர் உரையாடல் என் கண்முன் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் மூலம் தனக்குத் தோன்றிய தத்துவமாக மலர்ந்தது. ‘அனைத்து உயிர் வாழ் இனங்களையும்விட மனிதனுக்கு வாய்த்த வரப்பிரசாதம் இல்லற இன்பம் என்பதாகும். ஆசையே தீமைக்கும் அழிவுக்கும் வித்திடுவதாகும்’ என்ற புத்தர் பெருமானின் கூற்று இன்றும் பொருந்துவது கண்கூடு.

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்றும், இளைய தலைமுறையினரிடையே அரங்கேறும், பண்பு கெட்ட ஆபாசங்களைத்தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் பெரும்பாடுபட்டு வருவதற்கு எடுத்துக்காட்டுதான் இந்நு}ல்.

ஆசிரியரின் ஆதங்கம் சமுதாயச் சீர்திருத்தம் மட்டுமல்ல. பாரதியார் கூற்றுப்படி ‘புதியதோர் உலகம் செய்வோம் என்று பறைசாற்றிட இளைய சமுதாயத்தினரைக் கூவி அழைக்கும் பாங்கு இந்நு}லில் போற்றி மகிழத்தக்கவாறும் தர்க்கச் சிந்தனைகளைத் தூண்டுமாறும் உள்ளது.

இறுதியாக, கூறியவற்றையே மீண்டும் கூறுவது குற்றமாகும் என நு}லோர் கூறுவர். எனினும், இவ்வரிய நு}லினைப் படித்தும், படிக்கக் கேட்டும் பயனடைவோர் தமக்குத் தக்க வாய்ப்புக் கிட்டும்போது அணுகுண்டு போன்ற ஆயிரம் ஆயிரம் தீமை பயக்கும் படைகளையும் திருத்த முற்படுவர் என்பது என் நிலைப்பாடு.

அணுகுணடின் தீமைகள் பலவாயினும், உலக நாடுகளின் ஒற்றுமைக்கு உதவியதுபோல் தாங்கள் தோன்றியுள்ள இக்காலம் மிக நல்ல தருணம் அய்யா எனப் போற்றுகின்றேhம். இதுபோல் தரும சிந்தனைகளைத் தூண்டும் நு}ல்கள் பலவற்றை தாங்கள் ஆக்கிட வேண்டும். இறைவன் தங்களுக்கு நீங்காத செல்வமும், நீடித்த ஆயுளும் நிலையான ஆரோக்கியமும் வழங்கிட வணங்கி வாழ்த்தி, பொய்யா மொழிப்புலவர் திருவள்ளுவரின் குறளினை நினைவு கூர்ந்து மகிழ்கின்றேhம்.

தோன்றிற் புகழொடு தோன்றுக அ்திலார்
தோன்றிலிற் தோன்றhமை நன்று
நன்றி *
நாள் - 13.04.2004
(தாரண சித்திரை 1ம் நாள்)

அனுப்புநர்
அ. கெங்காதரன், பி.காம்., டி.சி.பி.டி.சி.எம்.எம்.
முன்னாள் மாவட்ட கூட்டுறவு துணைப் பதிவாளர்
தலைவர் ் கோவை மாவட்ட மனித உரிமைக் கழகம்
பொதுச் செயலாளர் - வள்ளலர் இயற்கை நல்வாழ்வு அறக்கட்டளை (ஆசிரமம்)
இலக்குமிநாயக்கன்பாளையம் (அஞ்சல் நிலையம்)
கரடிவாவி (வழி), பல்லடம் (தாலுக்கா).

No comments:

Post a Comment