Friday, October 9, 2009

என்னுரை

என்னுரை




அணுகுண்டு தாத்தா, வயது 83. என் பெற்ேறார் மு. கிருஷ்ணப்ப செட்டியார், ராமக்காள். சின்ன வதம்பச்சேரியில் 1922 – ல் நான் பிறந்து 1933 – ல் 5 – ம் வகுப்புடன் படிப்பு முடிந்தது. தகப்பனார் கைத்தறி புடவை நெய்தல் பணி செய்வார். நான் நெய்தலில் சில உதவி வேலைகளைச் செய்துகொண்டு, மதனகாமராஜன் முதலிய புத்தங்களைப் படிப்பேன். அதில் காம உறவு முதலிய வாசகங்கள் இருக்கும். ‘இதையெல்லாம் புத்தகத்தில் அச்சடிக்கிறார்களே. இதைக்கண்டிக்கும் பெரியவர்களே இல்லையா ?’ என்று வாலிப வயதில் ஒரு ஏக்கம். 1940–ல் 18 வயதான எனக்கும் வள்ளியம்மாளுக்கும் திருமணம் நடந்தது. 1941 ல் திருப்பூரில் குடியேறினோம்.

மூடப்பழக்கவழக்கங்களை எதிர்க்கும் மனிதர் (ஈ.வெ.ரா. அவர்கள்) ஒருவரும் இயக்கமும் இருப்பதை அறிந்து அதில் சேர்ந்தேன். 1946-ல் (24 வயதில்) ஆங்கிலேயர் (நமது இந்தியாவில்) ஆட்சி. திராவிடர் கழக தலைவர் தந்தை பெரியார் தலைமையில் மதுரையில் கறுப்பச்சட்டை முதல் மாநாடு நடைபெற்றது. அதில் கலவரத்தால் சிலர் உயிரிழந்தனர். 1970-ல் திருப்பூரில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுக்கு கறுப்புப் பொன்னாடை அணிவித்தேன். 1977-ல் (வயது 55-ல்) சில பக்திப் பாடல்களைப் படித்த காரணத்தால் ஆன்மீகவாதியாக மாறினேன்.

என் சொந்த ஊரான சின்னவதம்பச்சேரியில் _சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் அமாவாசைதோறும் நடைபெறும் பக்தி பஜனையில் கலந்து கொண்டு பஜனை பக்திப் பாடல் பாடுவேன். எனக்கு மூத்தவர் சிலரும் இளையவர்கள் பலரும் நன்றாகப் பாடுவார்கள். பாடுவதில் நான் கடைசியாக இருந்தேன். நான் மறுத்தும் பஜனைக் குழுவின் தலைவராக்கப்பட்டேன். திருப்பூரில் சில கோயில்களில் நடைபெறும் வார பஜனையில் கலந்துகொள்ளப் போகிற வழியில் சந்திக்கும் நண்பர்களைக் கூப்பிட்டால், நீங்கள் போய் கத்துங்கள். எனக்கு வேலையிருக்கிறதென்று மதிக்காமல், போய் விடுவார்கள்.

பக்தி பஜனைக்கு மதிப்பு இல்லாத காரணத்தால் ‘அணுகுண்டு பஜனை’ என்று பெயர் Nட்டினேன். இதென்ன அணுகுண்டு பஜனை என்ற பலரின் கேள்விகளுக்கு பக்தியைப் பற்றி சிறிது விளக்கம் சொல்ல வாய்ப்புக் கிடைத்தது. இந்த நோக்கம் நிறைவேறியதன் பொருட்டு இந்நு}லை “ஓம் _ முருகா ராம் (அணுகுண்டு) பஜன் மன்றம்”, சி.வதம்பச்சேரி அவர்களுக்கு பெருமையுடன் சம்ர்ப்பணம் செய்துள்ளேன்.

முற்காலங்களில் அரக்கர்கள் தோன்றி உலக மக்களுக்கும் தேவாதி தேவர்களுக்கும் தீங்கிழைத்து, அக்கிரமங்கள் செய்த அந்தந்த காலத்தில் மகாவிஷ்ணு அவதாரமெடுத்து பூமியில் மனிதராகப் பிறந்து அரக்கர்களை மாய்த்ததாகப் புராணங்கள் மூலமாக அறிகிேறாம். இவை நடந்து முடிந்தவை. ஏன் இன்றைய காலத்தில் அரக்கர்கள், ராட்சசர்கள் பிறக்கவில்லை என்று சிந்திக்கும் தருணத்தில், அணுகுண்டு அரக்கன் இருப்பதாக அறிந்து, 1982-ல் ‘அணுகுண்டரக்கன் சம்ஹhர விழா’ வினை சின்னவதம்பச்சேரியில் துவக்கி, சில ஆண்டுகள், கூனம்பட்டி ஆதீனம் நா. சரவண மாணிக்கவாசக சுவாமிகள், திருப்பூர் தியாகி வீரபாண்டி சுந்தராம்பாள் அம்மையார், கவிஞர் ஜம்பு நாகராஜன் இன்னும் பல அறிஞர்களை அழைத்து விழாக்களை நடத்தினேன். திருப்பூரிலும் பல ஆண்டு விழாக்களை பல கோயில்களில் நடத்திக் கொண்டிருக்கிேறாம். பிறகு வள்ளலார் சன்மார்க்க சங்கத்திலும் இணைந்தேன்.

பல பெரியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த அணுகுண்டு ஆண்டு விழாக்களின் புகைப்படங்களின் தொகுப்பு இத்துடன் இணைத்துள்ளேன். ஆன்மீக வளர்ச்சி மன்றத்தைத் தோற்றுவித்தும் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து அணுகுண்டு அரக்கனை மாய்க்க உருவாக்கிய முத்திரை வடிவிலான அணுவீஸ்வரர் ஆலயத்தினை அன்பர்கள் ஆர்வலர்கள் உதவியுடன் அமைத்திடக் கருதியுள்ளேன் * ஆதரவு தரவேண்டுகின்றேன்.

1986-ல் அடியேன் இயற்றிய அணுகுண்டரக்கன் சம்ஹhர மந்திரப்பாடல்களை, மிக எளிமையாக பல சிறுவர் - சிறுமிகள், மாணவர்கள் இயல்பாகப் பாடுகிறார்கள்.
1995-ல் காசியாத்திரை சென்று டில்லியில் மகாத்மா காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற சமயம் நண்பர் ஒருவர் தேசப்பிதாவைப் பற்றி பாடக் கேட்க, நான் மகாகவி பாரதி பாடலைப்பாட, அதற்கு அவர் விளக்கம் கேட்க, நான் விளக்கம் சொல்ல நேரிட்டது.

இதனை சின்ன வதம்பச்சேரி தொடக்கப்பள்ளிக் கூடத்தில் மாணவர்களுக்குச் சொன்னதன் தொடர்ச்சியாக திருப்பூரில் 57 பள்ளிகளிலும் சென்னையில் 2 பள்ளியிலும், கோவையில் ஒரு பள்ளியிலுமாக 60 கல்விக்கூடங்களில் மாணாக்கர்களுக்கு தேசபக்தி, தெய்வபக்தி, சமூக விழிப்பு உணர்வை உண்டாக்கும் நிகழ்ச்சி ஆகியன நடத்தியமைக்குப் பெற்ற கல்விச் சான்றுகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

24 ஆண்டு (1980) காலமாக அணுகுண்டு அரக்களை மாய்க்க அநேகம் கோவில்களில் பக்தி பஜனையும், ஆன்மீகப் பெரியோர்கள் பலரை வருகை தரச் செய்து அணுகுண்டை ஒழிக்கும் ஆன்மீகச் சொற்பொழிவுகள் பல நிகழ்த்தச் செய்து கொண்டும் 1996 – லிருந்து அணுகுண்டு தாத்தா 83 வயது ஆகிய நான் 59 பள்ளிகளில் மாணவர்களுக்கு தெய்வ பக்தி, தேச பக்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சியை தளராமல் நிகழ்த்திக் கொண்டு வந்தேன். ஆனால், 26.02.2004–ம் தேதியில் 60-வது பள்ளியாக கோவை _ சௌடேஸ்வரி வித்தியாலயம் பள்ளியில் எனது மூப்பு காரணமாகவும், மறதி காரணமாகவும் 80 சதவீத நிகழ்ச்சி தான் செய்ய முடிந்தது. பிறகு ஆட்டோகிராப் கேட்ட மாணவர்களுக்கு கையெழுத்திட பேனா எடுத்து எழுத முயற்சிக்கையில் அபரிமிதமான கை நடுக்கம் ஏற்பட்டதால் என்னால் எழுத முடியாமல் போயிற்று. இந்த நு}லை இயற்ற முற்பட்டமைக்கு இதுவும் ஒரு தூண்டுகோல்.

அணுகுண்டுகளினால் ஏற்படும் பேரழிவு பயங்கரமானது. வாழ்க்கையை அந்த கணமே முடித்து விடுகிறது. ஆனால் சிலர், ஆபாசம் என்னும் விதை ஊன்றி, ஆபாசத்தையே (கண்ணால் காணும்) சினிமாவில் வளர்த்துக் கொண்டிருப்பதால், மனித வாழ்க்கை முழுதும் சீரழிவுகளால் அதிபயங்கர துன்பத்துள் ஆட்பட்டு, பண்பு கெட்டு மடிகிறார்கள். ஆகவே ஆபாசத்தை வளர்க்கும் ஆபாச சினிமா அரக்க மனிதர்களைத் திருத்த வேண்டி இந்நு}லைப் படைத்துள்ளேன்.

ஆகவே எதிர்வரும் காலத்தில் ஆபாச சினிமா அரக்க மனிதர்களைத் திருத்த பண்பாளர்கள் பலர் முற்படுவார்கள் என்று நம்புகிறேன். திருந்தாவிடில் 2005 ஆகஸ்ட் 6-ம் நாளில் அஹிம்சா வழியில், சினிமா ஸ்டுடியோக்கள் முன் போராட்டம் தொடங்குவேன்.

இந்நு}லில் பொதிந்துள்ள கருத்துகளை கவனத்துடன் தேர்ந்தெடுத்து முகவுரை, அணிந்துரை தந்துள்ள மூவரும் எனது சிந்தனைப் பசிக்கு தக்க சமயத்தில் பல ஆண்டுகளாக ஊக்கம் கொடுத்தவர்கள் என்பதனைப் பெருமையாகச் சொல்லுகிறேன். அத்தகையவரில் திருப்பூர் வாரியார் சைவ சித்தாந்த இரத்தினம், கூட்டுறவு துணைப் பதிவாளர் (ஓய்வு) திருவாளர் nஜ.ஜp. ஜெயசீலன், பி.ஏ. அவர்களுக்கும் ‘சிந்தனையின் அபிநயம்’ நு}ல் ஆசிரியர் ஜனாப், எஸ்.ஜp. இசட்கான் அவர்களுக்கும் முன்னாள் மாவட்ட கூட்டுறவுத் துணைப்பதிவாளரும், கோவை மாவட்ட மனித உரிமைக் கழகத் தலைவரும், வள்ளலார் இயற்கை நலவாழ்வு அறக்கட்டளை பொதுச் செயலாளருமான, திருவாளர் அன்பு அ. கெங்காதரன் பி.காம்., டி.சி.பி., டி.சி.எம்.எம்., (திருப்பூர்) அவர்களுக்கும் கவிதைகளைத் தந்துள்ள கவிஞர்களுக்கும், வாழ்த்துக்களை வழங்கியுள்ள வர்த்தகப் பெருமக்களுக்கும், கல்விக் கூடங்களில் நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பளித்து நற்சான்றுகள் வழங்கிய ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நு}ல் படைக்க கூடவேயிருந்து வேண்டிய உதவிகளைச் செய்த திரு. அன்பு அ. கெங்காதரன் அவர்களுக்கு மீண்டும் எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் அருளாளர் திரு. மோகன் P. கந்தசாமி, நுஒ.ஆ.டு.A.இ அவர்களுக்கும்.

சாயத் தொழிற்சாலை சங்கத் தலைவர் திரு. சேர்மன் நா. கந்தசாமி B.A.இ B.டு. அவர்களுக்கும்

பனியன் துணி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் திரு. அகில் சு. ரத்தினசாமி அவர்களுக்கும் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தமைக்கு வணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்நு}லை வெளியிட சிறப்பு ஒத்துழைப்பு நல்கிய இனிய நண்பர்கள் திரு. நு.சு.P. கனகராஜன், திரு. P. துரைசாமி ஆகியோருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

இந்நு}லைப் பொலிவுற அச்சிட்டளித்த பி.வி.ஆர். ஆப்ஸெட், சென்னை – 14, மற்றும் வெளியிட்டுப் பெருமை சேர்த்த மணிமேகலைப் பிரசுர ஊழியர்களுக்கும் அதன் பத்ப்பாளர் அவர்களுக்கும் எனது அமைப்பின் சார்பாக உளங்கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

அன்புடன்
அணுகுண்டு தாத்தா
(எம்.கே. சவுண்டப்பன்)

No comments:

Post a Comment